என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » நடிகர் சங்க தேர்தல்
நீங்கள் தேடியது "நடிகர் சங்க தேர்தல்"
தென்னிந்திய நடிகர் சங்கம் தேர்தல் நடந்து மூன்று ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ள நிலையில், தற்போது நடிகர் சங்க தேர்தல் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை சங்க நிர்வாகிகள் தேர்தல் மூலம் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். 2015-ம் ஆண்டு அக்டோபர் 18-ந் தேதி நடைபெற்ற தேர்தலில் நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. தலைவராக நாசர், பொதுச்செயலாளராக விஷால், பொருளாளராக கார்த்தி, துணைத் தலைவர்களாக கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்களின் பதவிக்காலம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவடைந்தது. அந்த சமயத்தில் தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால், நடிகர் சங்கக் கட்டிட வேலைகள் நடைபெற்று வருவதால், தேர்தலை ஆறு மாதங்களுக்கு அப்போது தள்ளி வைத்தனர்.
ஆறு மாத காலக்கெடுவும் முடிவடைந்து விட்டதால், தேர்தல் நடத்தியாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். தற்போது நடிகர் சங்க தேர்தல் 23ம் தேதி நடக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள். இந்த தேர்தல் எம்ஜிஆர் ஜானகி கல்லூரியில் ஓய்வு பெற்ற நீதிபதி பத்மநாபன் தலைமையில் நடக்க இருக்கிறது.
நடிகர் சங்கத்துக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக நேற்று செயற்குழு கூட்டம் நடந்த நிலையில், ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகர் சங்க செயற்குழுவில் தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் தேர்வு செய்யப்பட்டு உள்ளதாகவும், தேர்தலில் மீண்டும் எங்கள் அணி போட்டியிடும் என்றும் நாசர் அறிவித்தார்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுகிறது. 2015-ல் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற நாசர் தலைமையிலான அணியின் பதவி காலம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முடிந்தது. ஆனாலும் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் தேர்தலை 6 மாதத்துக்கு தள்ளி வைத்தனர். தற்போது அந்த காலக்கெடுவும் முடிந்துள்ளதால் நடிகர் சங்க தேர்தலை நடத்துவதற்கான பணிகள் தொடங்கி உள்ளன.
கோப்புப்படம்
இதுகுறித்து ஆலோசிக்க நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் சென்னை தியாகராயநகரில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் நாசர் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் விஷால், துணைத்தலைவர் கருணாஸ் மற்றும் பூச்சி முருகன், அஜய்ரத்னம், சரவணன், மோகன், உதயா, ஜூனியர் பாலையா, டி.பி.கஜேந்திரன், ஸ்ரீமன், குட்டி பத்மினி, சங்கீதா, லலிதகுமாரி உள்ளிட்ட செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பிறகு நாசர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில், ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை தேர்தல் அதிகாரியாக நியமிப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. முறைப்படி அலுவலகத்தை இன்று (புதன்கிழமை) அவரிடம் ஒப்படைப்போம். தேர்தல் நடத்துவதற்கான 3 இடங்களை நாங்கள் பரிந்துரை செய்வோம். அதில் ஒரு இடத்தை நீதிபதி பத்மநாபன் தேர்வு செய்து தேர்தலை நடத்துவார். ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் பட்டியல் மாவட்ட பதிவாளரிடம் வழங்கப்படும். நடிகர் சங்க தேர்தலில் எங்கள் அணி மீண்டும் போட்டியிடும் என்றார்.
நடிகர் சங்கத்துக்கு விரைவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், தற்போது பதவியில் இருக்கும் விஷால், நாசருக்கு எதிராக புதிய அணி களம் காண இருக்கிறது.
நடிகர் சங்கத்தில் பொறுப்பு வகிக்கும் நாசர், விஷால், கார்த்தி உள்ளிட்டோரின் பதவி காலம் கடந்த அக்டோபர் மாதத்துடன் முடிந்தது. ஆனால் நடிகர் சங்க கட்டிட வேலைகள் முடியாததால் தேர்தலை 6 மாதங்களுக்கு தள்ளிவைத்தனர். தற்போது அந்த காலக்கெடுவும் முடிந்துள்ளதால் தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் தொடங்கி உள்ளன.
தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதியை தேர்வு செய்து நியமிக்க நடிகர் சங்கத்தின் அவசர செயற்குழு கூட்டம் நாளை (14-ந்தேதி) சென்னையில் நடக்க உள்ளது. அதன்பிறகு தேர்தல் அதிகாரி தேர்தல் நடத்துவதற்கான தேதி, மற்றும் தேர்தல் நடைபெறும் இடத்தை அறிவிப்பார். ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் பட்டியலும் வெளியிடப்படும்.
தேர்தலில் விஷால் அணியினர் போட்டியிடுவது உறுதியாகி உள்ளது. நாசரும், விஷாலும் தற்போது வகிக்கும் தலைவர், பொதுச்செயலாளர் பதவிகளுக்கு மீண்டும் போட்டியிடுகிறார்கள். பூச்சி முருகன் துணைத்தலைவர் பதவிக்கும், கார்த்தி பொருளாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார்கள். தற்போதைய செயற்குழு உறுப்பினர்கள் பலர் அதே பதவிகளுக்கு மீண்டும் போட்டியிடுகிறார்கள்.
எதிர் அணியினர் ராதிகா சரத்குமாரை தலைவராக நிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். விஷாலை எதிர்த்து பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக நடிகர் உதயா ஏற்கனவே அறிவித்து உள்ளார். டி.ராஜேந்தர், எஸ்.வி.சேகர், சிம்பு ஆகியோரும் விஷால் அணிக்கு எதிராக களம் இறங்குவார்கள் என்று கூறப்படுகிறது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 2019 ஜூலை மாதம் தேர்தல் நடத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #NadigarSangam #Vishal
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு 2015-ல் தேர்தல் நடத்தப்பட்டு விஷால் தலைமையில் போட்டியிட்ட புதிய நிர்வாகிகள் பொறுப்புக்கு வந்தனர். இவர்களின் 3 ஆண்டு பதவிகாலம் முடிந்ததை தொடர்ந்து கடந்த அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் நடிகர் சங்க கட்டிட பணிகள் முடியாததால் பொதுக்குழுவை கூட்டி தேர்தலை தள்ளி வைத்தனர். தற்போது நடிகர் சங்க கட்டிட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. தரைத்தளத்துடன் மூன்று மாடிகளில் இந்த கட்டிடம் உருவாகி உள்ளது. நடிகர் சங்க அலுவலகம், கருத்தரங்கு கூடம், திருமண மண்டபம் ஆகியவை கட்டப்பட்டு உள்ளன.
அடுத்து உள் அலங்கார வேலைகள் நடக்க உள்ளன. செலவு ரூ.30 கோடியை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக மீண்டும் நிதி திரட்ட நடிகர், நடிகைகளின் நட்சத்திர கலைவிழாவை விரைவில் நடத்த ஏற்பாடுகள் நடக்கின்றன. ஜூலை மாதம் நடிகர் சங்க தேர்தலை நடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்ததும் நடிகர் சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடக்க உள்ளது. இந்த கூட்டத்தில் நடிகர் சங்க தேர்தலை நடத்தும் தேதியை முடிவு செய்கிறார்கள். நட்சத்திர கலைவிழாவை எங்கு எப்போது நடத்துவது என்பதையும் அறிவிக்க உள்ளனர். நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் மீண்டும் போட்டியிட திட்டமிட்டு உள்ளனர். #NadigarSangam #Vishal
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X